காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஆம் ஆத்மி எம்எல் ஏ கைது
காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஆம் ஆத்மி எம்எல் ஏ கைது
ADDED : செப் 08, 2025 08:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு தோடா தொகுதியிலிருந்து தேர்வான ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ வாக, மெஹ்ராஜ் மாலிக் இருந்து வருகிறார். மெஹ்ராஜ் மாலிக், தோடா மாவட்டத்தின் துணை ஆணையர் ஹர்விந்தர் சிங்கிற்கு எதிராக, அவமானகரமான கருத்துக்களை தெரிவித்ததாகவும், சட்டசபைக்கு புறம்பான மொழியைப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இன்று கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த சட்டத்தின் கீழ் விசாரணை இல்லாமல் ஒரு எம்எல்ஏ, காவலில் வைக்கப்படுவது இதுவே முதல் முறை.
தனது அறிக்கைகளால் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் மெஹ்ராஜ் மாலிக் மீதான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.