ADDED : செப் 20, 2024 09:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சத்தா கூறியதாவது:
பதவி விலகிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் ஒழுக்கத்தை நிரூபிக்கவே பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வரின் அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை விரைவில் காலி செய்வார். அவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அரசு வீடு பெற அவர் தகுதியானவர். எனவே, மத்திய அரசு டில்லியில் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்க வேண்டும். இதற்காக நாங்கள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியதில்லை என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.