ADDED : மார் 14, 2024 11:13 PM

துமகூரு: பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி பாலமஞ்சுநாத சுவாமி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
துமகூரு ஹுலியூர்துர்கா ஹங்கரஹள்ளி கிராமத்தில், வித்யா சவுடேஸ்வரி மடம் உள்ளது. இங்கு மடாதிபதியாக இருந்தவர் பாலமஞ்சுநாத சுவாமி, 36. இவருக்கு தோல் நோய் இருந்தது.
'வாட்ஸாப்' வீடியோ காலில், பெண் மருத்துவர் ஒருவரிடம், தோல் நோயை காண்பித்தார். அதை ஆபாசமாக வீடியோ எடுத்து, பெண் டாக்டர் மிரட்டினார்.
இதுகுறித்து மடாதிபதி அளித்த புகாரில், பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மடாதிபதியின் உதவியாளர் அபிலாஷ் தான், மடாதிபதியை மிரட்டி, பணம் பறிக்க முயன்றது தெரிந்தது. இதனால் அபிலாஷ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையின் போது, மடத்தில் தங்கி படிக்கும் மாணவியை, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மடாதிபதி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மடாதிபதியும் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை துமகூரு 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
நேற்றுடன் மடாதிபதியின் போலீஸ் காவல் நிறைவு பெற்றது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேற்கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பு அனுமதி கேட்கவில்லை. இதனால் மடாதிபதியை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பின்னர் துமகூரு மத்திய சிறையில், மடாதிபதி அடைக்கப்பட்டார்.

