16 வயது சிறுமி பலாத்காரம் மடாதிபதிக்கு 35 ஆண்டு சிறை
16 வயது சிறுமி பலாத்காரம் மடாதிபதிக்கு 35 ஆண்டு சிறை
ADDED : டிச 22, 2025 12:03 AM

பெலகாவி: பக்தரின், 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கர்நாடகாவில் உள்ள மடாதிபதிக்கு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெலகாவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டம், சித் தாபுரா தாலுகாவைச் சேர்ந்தவர், லோகேஸ்வரா சாபண்ணா ஜம்பகி, 3-0.
உடல்நிலை பாதிப்பு பெலகா வி மாவட்டம், ராய்பாக் தாலுகா, மேக்கலி கிராமத்தில், ராமலிங்கா மடம் என்ற பெயரில் மடத்தை நிறுவி, தன்னை தானே மடாதிபதியாக அறிவித்து கொண்டார்.
தன் பெ யரை, ஹடயோகி லோகேஸ்வர சுவாமிகள் என்றும் மாற்றிக் கொண்டார். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இவருக்கு பக்தர்களாக இருந்தனர்.
இவரது பக்தர் ஒருவரின் 16 வயது மகள், பி.யு.சி., படிக்கிறார். இவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதை குணப் படுத்தும்படி மடாதிபதியிடம் கூறி, மகளை கடந்த மே 13ல் மடத்தில் விட்டுச் சென்றார் பக்தர்.
மறுநாள், சிறுமியை தன்னுடன் மந்த்ராலயாவுக்கு அழைத்து சென்றார் மடாதிபதி. அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மே 16ல், பாகல்கோட்டுக்கு அழைத்து வந்து மீண்டும் லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்தார்.
அபராதம் அதன்பின், சிறுமியை மஹாலிங்கபுரா பஸ் நிலையத்தில் விட்டு விட்டு, அவரது தந்தைக்கு தகவல் கூறிவிட்டு தப்பியோடினார்.
சிறுமியின் பெற்றோர், பெலகாவியின், மூடலகி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், மடாதிபதி லோகேஸ்வராவை கைது செய்தனர். தகவலறிந்த கிராமத்தினர், அவரது மடத்தில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர்.
வழக்கில் விசாரணையை முடித்த போலீசார், பெலகாவி மாவட்ட, 'போக்சோ' நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி புஷ்பலதா, லோகேஸ்வராவுக்கு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதி த்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கவும், அந்த தொகையை தேசிய வங்கியில் ஐந்து ஆண்டு டிபாசிட் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

