அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம்: ஓபிஎஸ்., மீண்டும் மனு
அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம்: ஓபிஎஸ்., மீண்டும் மனு
UPDATED : மார் 29, 2024 05:48 PM
ADDED : மார் 29, 2024 05:18 PM

புதுடில்லி: ‛‛ அ.தி.மு.க., வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது சட்ட விரோதம்'' என தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மனு அளித்து உள்ளார்.
அ.தி.மு.க., கட்சி பெயர், கொடியை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இ.பி.எஸ்., தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் மனு அளித்தார். அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் மீண்டும் மனு அளித்து உள்ளார். அந்த மனுவில், சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் ‛ஸ்பெசிமன்' லும் இ.பி.எஸ்., பன்னீர்செல்வம் கையெழுத்து உள்ளது. இருவர் கையெழுத்து இல்லாமல் அ.தி.மு.க., வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

