டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது
டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது
ADDED : ஜூலை 07, 2025 03:24 PM

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த, வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட வெளிநாட்டினர் 29 பேரை  போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதியில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது வங்க தேசத்தினர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.
சந்தேகத்திற்குரிய நபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை குழப்பும் வகையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு பிடிபட்ட  வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட 29 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

