ஊதி பெரிதாக்க வேண்டாம்; ஆளை கண்டுபிடிங்க; பவன் கல்யாணுக்கு சொல்கிறார் பிரகாஷ் ராஜ்
ஊதி பெரிதாக்க வேண்டாம்; ஆளை கண்டுபிடிங்க; பவன் கல்யாணுக்கு சொல்கிறார் பிரகாஷ் ராஜ்
ADDED : செப் 21, 2024 06:38 AM

ஹைதராபாத்; திருப்பதி லட்டு விவகாரத்தை ஊதி பெரிதாக்காமல் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியாகி இருப்பது பூதாகரமாகி உள்ளது. கடும் நடவடிக்கை கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், துணை முதல்வர் பவன் கல்யாண் சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;
அன்புள்ள பவன் கல்யாண். நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில்தான் நடந்துள்ளது. தயவு செய்து விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள். ஏன் தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள்.
இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார்.