நடிகை கங்கனா ரணாவத் துவங்கும் உணவகம் : நாளை (பிப்.14) திறப்பு
நடிகை கங்கனா ரணாவத் துவங்கும் உணவகம் : நாளை (பிப்.14) திறப்பு
ADDED : பிப் 13, 2025 06:50 PM

மணாலி: பாலிவுட் நடிகையும், பா.ஜ, லோக்சபா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் 39, மணாலியில் புதிய உணவகம் ஒன்றை நாளை திறக்க உள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், நடந்து முடிந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பா.ஜ.வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யானார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'எமர்ஜென்சி' படத்தில் மறைந்த பிரதமர் இந்திராவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கங்கனா. கடும் பொருளாதார பிரச்னை, படத்தை திரையிட எழுந்த எதிர்ப்பு, சென்சார் கெடுபிடி என அனைத்தையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் தனது இமாச்சல் பிரதேசத்தின் மணாலியில் ‛ தி மவுண்டன் ஸ்டோரி கபே ' என்ற பெயரில் சைவ உணவகம் ஒன்றை திறக்க உள்ளார். காதலர் தினமான நாளை (பிப்.14) இந்த உணவகத்தின் திறப்பு விழா நடக்கிறது.
புதிய உணவகத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் அதில் “இது உங்களுடனான எனது உறவின் கதை. அம்மாவின் சமையல் ஏக்கத்துக்கு இந்த உணவகம் ஒரு காணிக்கை. எனது சிறுவயது கனவு இப்போது நனவாகிறது,” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.