ADDED : ஜன 11, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகன்னடா: பிரபல நடிகை சாய் பல்லவி, கோகர்ணாவுக்கு சென்று மஹாபலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்வித்தார்.
பிரபல நடிகை சாய் பல்லவி, தான்டேலா என்ற தெலுங்கு படத்தில், நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்புக்காக கடந்த சில நாட்களாக, உத்தரகன்னடா, அங்கோலாவின், காபித்கேனியில் தங்கிஉள்ளார்.
நேற்று காலை இங்கிருந்து, கோகர்ணாவுக்கு சென்ற சாய் பல்லவி, மஹாபலேஸ்வரர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார். அவரை கோவில் நிர்வாகம் கவுரவித்தது.
சாய் பல்லவி நடிக்கும், தான்டேலா படம் ஐந்து மொழிகளில் தயாராகிறது. நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார்.