ADDED : பிப் 13, 2025 10:00 PM
விக்ரம்நகர்:“பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, நகரில் மின்வெட்டு உள்ளது. டில்லியை உத்தர பிரதேசமாக மாற்றுவார்கள்,” என, பதவி விலகும் முதல்வர் ஆதிஷி கூறினார்.
நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி, தன் பிடியை இழந்த மூன்று நாட்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருகிறது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 40க்கும் மேற்பட்ட மின்வெட்டுகள் ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. மக்கள், இப்போதே இன்வெர்ட்டர்களை வாங்கத் துவங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி அரசு, மின்சாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது. அது பா.ஜ., ஆட்சிக்கு வந்த மூன்று நாட்களுக்குள் சரிந்துவிட்டது.
எப்படி ஆட்சி செய்வது என்று பா.ஜ.,வுக்கு தெரியவில்லை. உத்தர பிரதேசத்தைப் போலவே டில்லியிலும் நீண்ட மின்வெட்டு சூழ்நிலையை அக்கட்சி உருவாக்கும். மணிக்கணக்கான மின்வெட்டுகளுக்குப் பெயர் பெற்ற நகரமாகவும் மாற அக்கட்சி விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

