sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல்வர் தலைமையில் 'விவசாய வளர்ச்சி ஆணையம்'

/

முதல்வர் தலைமையில் 'விவசாய வளர்ச்சி ஆணையம்'

முதல்வர் தலைமையில் 'விவசாய வளர்ச்சி ஆணையம்'

முதல்வர் தலைமையில் 'விவசாய வளர்ச்சி ஆணையம்'


ADDED : பிப் 17, 2024 04:41 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l விவசாயத்தை லாபகரமான தொழிலாக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு விவசாய திட்டங்களை ஒருங்கிணைத்து, 'கர்நாடக விவசாய சம்ருத்தி திட்டம்' செயல்படுத்தப்படும்

l விவசாயம், கால்நடை, தோட்டக்கலை, பால் உற்பத்தி அடங்கிய விரிவான விவசாய திட்டத்தால், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்

l மண்ணின் குணம், மார்க்கெட் தேவையின் அடிப்படையில் எந்த விளைச்சல் பயிரிட வேண்டும் என்பது குறித்து, விவசாயிகளுக்கு வழி காட்டப்படும்

l மண் பரிசோதனை, தரம் பற்றி தகவல் தெரிவிக்கப்படும்

l புதிய விவசாய நடைமுறை, தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

சரியான விலை


l பயிர்களை பராமரித்து பதப்படுத்துவது, சரியான விலையை மதிப்பிடுவது குறித்து தகவல் கூறப்படும்

l விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு, நியாயமான விலை கிடைக்க செய்யும் நோக்கில், மார்க்கெட் வசதி செய்து தரப்படும்

l விவசாயம், இது தொடர்பான கொள்கை மற்றும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வசதியாக, விவசாயம், தோட்டக்கலை, பட்டு, மீன் வளம், கூட்டுறவு, கால்நடை துறைகள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த, முதல்வர் தலைமையில் 'விவசாய வளர்ச்சி ஆணையம்' அமைக்கப்படும்

l முந்தைய அரசில் செயல்படுத்திய, விவசாய பாக்யா திட்டம், மீண்டும் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு, 2023 -24ம் ஆண்டு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டும் இதே அளவு நிதி வழங்கப்படும்.

விதை வங்கி


l அழியும் நிலையில் உள்ள பயிர் ரகங்களை சேகரித்து, பாதுகாக்கும் நோக்கில் 'விதை வங்கி' அமைக்கப்படும்

l 'நம்ம மில்லெட்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், பதப்படுத்தப்பட்ட சிறு தானியங்கள், சிறுதானிய உற்பத்தி பொருட்களை அக்ரி - டெக் நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பில் கைக்கு எட்டும் விலையில் கிடைக்க வழி செய்யப்படும்

l மாநிலத்தின் வறட்சி பாதித்த மற்றும் மழை பகுதிகளில், மண், தண்ணீரை பாதுகாக்க நரேகா திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 1,000 வீதம் 5,000 சிறிய ஏரிகள் அமைக்கப்படும்.

l பெங்களூரில் உள்ள விவசாயத் துறைக்கு உட்பட்ட, விவசாய மையம் தனியார் ஒருங்கிணைப்பில், விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஞான மையமாக மாற்றப்படும்.

புதிய தொழில்நுட்பம்


l விவசாயிகளுக்கு பயிர்களை தாக்கும் பூச்சிகள், நோய், ஊட்டச்சத்து நிர்வகிப்பு குறித்து ஆலோசனை கூற, ராய்ச்சூர் விவசாய பல்கலைக்கழகம் வடிவமைத்த e - SAP தொழில்நுட்பம், விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்படும்

l உணவு பாதுகாப்பு மண்டலம், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாய உற்பத்திகள் வீணாகாமல் தடுக்கவும், இவைகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், விவசாயத்துறை சார்பில், தனி உணவு பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். இதன் மூலம் வெவ்வேறு துறைகளில் உள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான, அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்படும்.

l விவசாயம், தோட்டக்கலைத் துறை உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்கப்படுத்த, கர்நாடக விவசாய உற்பத்திகள் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி கார்ப்பரேஷனை பலப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நடப்பாண்டு, 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவு பூங்காக்கள்


l விவசாயம், தோட்டக்கலை உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதியாக, மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில், அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

ஷிவமொகாவின் சோகானே, விஜயநகராவின் இட்டங்கிஹாளா, பெங்களூரு ரூரலின், பூர்ச்சேனஹள்ளியில் 'உணவு பூங்காக்கள்' அமைக்கப்படும்.

l இன்றைய காலத்தில், பாரம்பரிய விவசாய நடைமுறை மாறியுள்ளது. செயற்கைக்கோள் படம், சென்சார்கள் பயன்பாடு, மெஷின் லேர்னிங் போன்ற, அதிநவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையில், விளைச்சலின் தன்மையை முன் கூட்டியே தெரிந்து கொள்ள, ஒரு செயலி உருவாக்கப்படும்

l விவசாய உற்பத்தி மையங்களை, மேலும் பலப்படுத்தவும், சிறப்பாக செயல்பட வசதியாக பயிற்சி அளிக்க, வழி காண்பிக்க Agri Accelerater Platform மூலமாக Sttart - up கள் மேம்படுத்தப்படும்

l மாண்டியா மாவட்டத்தின், வி.சி.பாரமில் விவசாய பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய, வல்லுனர் கமிட்டி அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us