sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியதின் எதிரொலி; இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

/

டில்லி ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியதின் எதிரொலி; இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

டில்லி ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியதின் எதிரொலி; இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

டில்லி ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியதின் எதிரொலி; இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

27


UPDATED : பிப் 24, 2026 04:04 PM

ADDED : பிப் 24, 2026 10:39 AM

Google News

27

UPDATED : பிப் 24, 2026 04:04 PM ADDED : பிப் 24, 2026 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய விவகாரத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப் கைது செய்யப்பட்டு உள்ளார்.

புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சில நாட்கள் முன்பு ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது அங்கு நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இந்தியா, அமெரிக்க இடையேயான ஒப்பந்தம் சமரசத்தால் செய்யப்பட்டது போன்ற வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து இருந்தனர்.

போராட்டத்தை ஆரம்பித்த சில வினாடிகளில் தாங்கள் அணிந்திருந்த சட்டையை களைந்து எதிர்ப்பு முழக்கமிட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், பின்னர் அங்கிருந்து அகற்றினர்.

இளைஞர் காங்கிரசின் இந்த செயலுக்கு கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் எழுந்தது. நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என்று காங்கிரஸ் நிர்வாகிகளை பலரும் வசைபாடினர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந் நிலையில், இந்த போராட்டத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப் என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். கைது நடவடிக்கையை அடுத்து, உதய்பானு சிப்பிடம் விசாரணை நடத்துகின்றனர்.

இதனிடையே, உதய்பானு சிப்பை நேற்று மாலையே பிடித்துவிட்டதாகவும், கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்து இருப்பதோடு, எந்த விசாரணைக்கும் உதய்பானு சிப் ஒத்துழைப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us