sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநில தேர்தல் கமிஷனரகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் முக்கிய ஆலோசனை; 27 ஆண்டுகள் கழித்து இன்று கூட்டம்

/

மாநில தேர்தல் கமிஷனரகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் முக்கிய ஆலோசனை; 27 ஆண்டுகள் கழித்து இன்று கூட்டம்

மாநில தேர்தல் கமிஷனரகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் முக்கிய ஆலோசனை; 27 ஆண்டுகள் கழித்து இன்று கூட்டம்

மாநில தேர்தல் கமிஷனரகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் முக்கிய ஆலோசனை; 27 ஆண்டுகள் கழித்து இன்று கூட்டம்


ADDED : பிப் 24, 2026 09:39 AM

Google News

ADDED : பிப் 24, 2026 09:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; 27 ஆண்டுகள் கழித்து, மாநில தேர்தல் கமிஷனர்களுடன், மத்திய தலைமை தேர்தல் கமிஷன் இன்று முக்கிய ஆலோசனையை நடத்துகிறது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு;

டில்லி பாரத் மண்டபத்தில் இன்று (பிப்,24) மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையில் மாநில தேர்தல் கமிஷனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தேர்தல் கமிஷனர்கள் சுக்வீர்சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கூட்டத்தில் முன்னிலை வகிக்க உள்னளர். கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேர்தல் கமிஷனர்கள் சட்ட வல்லுநர்கள், தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

வாக்காளர் பட்டியல், தொழில்நுட்ப முன்னெடுப்புகள், தேர்தல்கால செயல்முறைகள் குறித்து அதிகார வரம்புக்குள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கத்தின்படி இந்த கூட்டம் நடக்கிறது.

.கூட்டத்தில், அண்மையில் தொடங்கப்பட்ட ECINET டிஜிட்டல் தள சேவைகளை ஒழுங்குபடுத்துவது, தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை, அதிகாரிகள் காட்சிப்படங்கள் மூலம் விளக்க இருக்கின்றனர். இந்த காட்சிப்படங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் வலிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

1999ம் ஆண்டுக்கு பின்னர், கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us