பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!
பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!
ADDED : மே 04, 2025 01:26 PM

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இன்று (மே 04) விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, விமானப்படை தலைமை தளபதி உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.