ADDED : ஆக 04, 2025 11:52 PM
மும்பை: அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த, 'ஏர் இந்தியா' விமானத்தில் கரப்பான்பூச்சிகள் இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்ததை அடுத்து, அந்நி றுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு ஏராளமான பயணியருடன் ஏர் இந்தியாவின் 'ஏஐ 180' விமானம் நேற்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில், பயணி ஒருவர் தன் இருக்கையில் கரப்பான் பூச்சிகள் நடமாடுவதாக விமான பணிப்பெண் களிடம் புகார் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு பயணியும் புகார் எழுப்பினார். இதையடுத்து, அவர்கள் இரு வருக்கும் மாற்று இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கிடையே, எரி பொருள் நிரப்ப மேற்கு வங்கத்தின் கொல்கட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானம் சுத்தம் செய்யப்பட்டது.
'பயணியருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' என, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.