ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி
UPDATED : ஜூலை 23, 2025 05:32 PM
ADDED : ஜூலை 23, 2025 02:42 PM

திருவனந்தபுரம்: கத்தார் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடுக்கு திரும்பி வந்தது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அதேபோல், ஆமதாபாத்தில் இருந்து கிளம்பிய இண்டிகோ விமானத்திலும்  தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
கோழிக்கோடுவில் இருந்து தோஹாவுக்கு பயணிகள் 188 பேருடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம், புறப்பட்டு 2 மணி நேரம் ஆன நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கோழிக்கோடுவிற்கு விமானம் திரும்பி வந்தது.
பின்னர் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து 188 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானம், பாதுகாப்பாக தரை இறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமான நிலையத்தில் உணவு  ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதே நேரத்தில் விமான நிறுவனம் நிலைமையைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது.
பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மைக்காலமாக விமானத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

