UPDATED : மார் 22, 2024 06:55 PM
ADDED : மார் 22, 2024 06:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பயணிகளின் பாதுகாப்பு விதிகளை மீறிய புகாரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
விமான பயணிகளின் பாதுகாப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகள் அமலில் உள்ளன. இதனை அனைத்து விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்பது விதி.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் 1ம் தேதி வரையில் விமான பயணிகளின் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என ஏர் இந்தியா நிறுவனம் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ., கண்காணிப்பு அமைப்பு ஷோகாஷ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. பதில் திருப்தியளிக்கவில்லை என்பதால் ரூ. 80 லட்சம் அபராதம் விதித்தது.

