இந்தூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: டில்லியில் அவசர தரையிறக்கம்
இந்தூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: டில்லியில் அவசர தரையிறக்கம்
ADDED : ஆக 31, 2025 01:56 PM

புதுடில்லி: டில்லியில் இருந்து இந்தூர் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே (டில்லி) விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டில்லி விமான நிலையத்தில் இருந்து இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது இயந்திரத்தில் தீ பற்றும் சூழல் நிலவியதால் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து டில்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார். விமானம் தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
பின்னர் டில்லி விமான நிலையத்தில் விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கினார். விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு, செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.