டில்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் என கணிப்பு
டில்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் என கணிப்பு
ADDED : நவ 06, 2025 12:51 AM
புதுடில்லி: தலைநகர் டில்லியில், காற்றின் தரம் லேசாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
காற்றின் தரக்குறியீடு நேற்று மாலை 4:00 மணிக்கு, 202ஆக பதிவாகி இருந்தது. இது, மோசமான நிலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு முன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காற்றின் தரக்குறியீடு நேற்று முன் தினம் 291ஆகவும், 3ம் தேதி 309 ஆகவும் இருந்தது. டில்லி மாநகரில் உள்ள 38 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 28 நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 300க்கும் மேல் பதிவாகி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
அண்டை மாநிலங்களான பஞ்சாபில் 94, ஹரியானாவில் 13 மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 74 இடங்களில் நேற்று பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 8ம் தேதி வரை காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கும் செல்லும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 30.4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 1.6 டிகிரி அதிகம் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், டில்லியில் இன்று வானம் தெளிவாக இருக்கும் என்றும், வெப்பநிலை 32 டிகிரி செல்ஷியஸ் பதிவாகலாம் என கணித்துள்ளது.

