காற்றின் தரம் மிகவும் மோசம் முதியோர் இல்லங்களில் முன்னெச்சரிக்கை
காற்றின் தரம் மிகவும் மோசம் முதியோர் இல்லங்களில் முன்னெச்சரிக்கை
ADDED : நவ 05, 2025 02:14 AM

புதுடில்லி:டில்லியில் நேற்று காலை நிலவரப்படி, நிலவிய காற்றின் சுத்தத்தன்மை மிகவும் மோசமாக இருந்தது. சுத்தக்காற்றின் தரம் சராசரியாக, 311 என இருந்தது.
சமீப காலமாக பல்வேறு காரணங்களால், டில்லி காற்றின் தரம் மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. காற்றின் சுத்தத்தன்மையை ஏ.க்யு.ஐ., என்ற குறியீடு மூலம், தினமும் காலையில் குறிப்பிடப்படுகிறது.
அந்த வகையில், 0 - 50 சிறப்பு; 51 - 100 திருப்திகரம்; 101 - 200 சராசரி; 201 - 300 மோசம்; 301 - 400 மிகவும் மோசம்; 401 - 500 மிகவும் அபாயகரமான நிலை என குறிப்பிடப்படுகிறது.
நேற்று காலை நிலவரப்படி, டில்லி நகரின் சராசரி ஏ.க்யு.ஐ., 311 என இருந்தது. எனினும், அலிப்பூர் - 421, வாசிர்புர் - 407, பாவனா 402, ஆனந்த்விஹார் - 412 என்ற அளவில் இருந்தது. இது, மிகவும் அபாயகரமான நிலையை குறிப்பிடுகிறது. 17 வானிலை ஆய்வு மையங்களில் காற்றின் சுத்தத்தரம் மிகவும் மோசமாக, 300க்கு மேலேயே இருந்தது.
டில்லியின் அதிகபட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்ஷியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனின் சராசரி அளவை விட, 1.2 செல்ஷியஸ் அதிகரித்து, 16.5 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருந்ததாக, வானிலை ஆய்வு மையத்தின் சமீர் என்ற செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

