பண்டிகை காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி
பண்டிகை காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி
ADDED : செப் 09, 2024 02:42 PM

புதுடில்லி: பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு களமிறங்கி உள்ளது. சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விடுமுறை காலங்களில் பயணிகள் அதிகம் பேர் விமான பயணத்தை நாடுவதை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் நிறுவனங்கள், அந்த நேரத்தில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: பண்டிகை காலத்தில் விமான கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்படும் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பயணிகள் எந்தவித அசவுகரியம் ஏற்படக்கூடாது என் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். பண்டிகை காலத்தில் அனைவரும் வீடுகளுக்கு திரும்ப நினைப்பார்கள். இதனால், கட்டணத்தை உயர்த்தக்கூடாது.
விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.