யு டியூப், கூகுளுக்கு எதிராக ரூ.4 கோடி கேட்டு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் வழக்கு
யு டியூப், கூகுளுக்கு எதிராக ரூ.4 கோடி கேட்டு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் வழக்கு
ADDED : அக் 02, 2025 11:25 PM

புதுடில்லி: 'யு டியூப்' சமூக ஊடகத்தில், தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஏ.ஐ., எனப்படும் செய ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், போலியான 'வீடியோ'க்கள் வெளியானதை அடுத்து, அந்நிறுவனத்துக்கு எதிராக, 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனும் இணைந்து மான நஷ்ட வ ழக் கு தொடர்ந்து உள்ளனர்.
போலி வீடியோ விளம்பர நோக்கத்திற்காக தங்கள் பெயர், படங்கள் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்துவதை தடுக்கவும், தங்கள் தனியுரிமை காக்கப்பட வேண்டும் என கோரியும், டில்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விளம்பர நோக்கத்திற்காகவோ, அனுமதியின்றியோ, இருவரின் படங்கள், வீடியோக்களை பயன்படுத்தக் கூடாது என கூறியது. தனிப்பட்ட நபர்களின் தனியுரிமை காக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், 'ஏ.ஐ., பாலிவுட் இஷக்' என்ற யு டியூப் சேனலில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் போலி வீடியோக்கள் உலா வருவதாக கூறப்படுகிறது.
ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் மிக மோசமான வகையில் இந்த வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், வருத்தம் அடைந்த இருவரும், யு டியூப் மற்றும் அதன் தாய் நிறுவனமான கூகுளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது குறித்து அந்த மனுவில் கூறப் பட்டிருப்பதாவது:
யு டியூப் தளத்தில் எங்கள் பெயர்கள், குரல்கள் மற்றும் படங்கள் அனுமதி இல்லாமல் பயன் படுத்தப்படுகின்றன.
ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட மிக மோசமான போலி வீடியோக்களும் உலா வருகின்றன.
ஏ.ஐ., பயிற்சிகளுக்காக இப்படிப்பட்ட வீடியோக்களை உருவாக்க யு டியூப் கொள்கை அனுமதிக்கிறது.
நஷ்ட ஈடு இதை பயன் படுத்தி சிலர் போலியான வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு விடுகின்றனர்.
அவை, ஏ.ஐ., மூலம் மீண்டும், மீண்டும் சமூக வலைதளங்களில் உலா வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, இதை கட் டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால், அந்நிறுவனங்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.