குஜராத்தில் மது விருந்து: ஆப்ரிக்காவைச் சேர்ந்த 13 பேர் கைது
குஜராத்தில் மது விருந்து: ஆப்ரிக்காவைச் சேர்ந்த 13 பேர் கைது
ADDED : அக் 25, 2025 10:35 PM
ஆமதாபாத்: மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் தடையை மீறி பண்ணை வீட்டில் விருந்தில் மது அருந்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த 13 பேர் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விருந்தில் 70 பேர் கலந்து கொண்ட நிலையில் ஆப்ரிக்காவை சேர்ந்த 13 மாணவர்கள் உட்பட 15 பேர் மது அருந்தி உள்ளனர். தொடர்ந்து மது சப்ளை செய்தவர் மற்றும் பண்ணை வீட்டின் உரிமையாளர் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குஜராத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று சேர்ப்பதற்காக இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மாறுவேடத்தில் சென்று போதையில் இருந்தவர்களை கைது செய்துள்ளனர்.
ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து வந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் கென்யாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மற்றவர்கள் மடகாஸ்கர், மொசாம்பிக், கொமோரோஸ் நாட்டில் இருந்தும் படிக்க குஜராத் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

