/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எங்கள் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர்களா? உஷ்ணமாகும் கூட்டணி கட்சியினர்

ADDED : அக் 25, 2025 11:07 PM
கடந்த சட்டசபை தேர்தலில் காங்.,- தி.மு.க., கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டன. அதில், காங்., 2 தொகுதிகளிலும், தி.மு.க., 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்தமுறை ஆளுங்கட்சியாக இருந்த இக்கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் தற்போது உள்ளது. இந்நிலையில் கடந்த தேர்தலில் காங்., தலைமையில் தேர்தலை சந்தித்த தி.மு.க., தற்போது தனது தலைமையில் தேர்தலை சந்தித்து முதல்வர் பதவியை கைப்பற்ற களப்பணியாற்றி வருகிறது. தற்போது தங்கள் வசம் உள்ள 6 தொகுதிகளில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வரும் நிலையில், கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் தனது கட்சி நபர்களை களமிறக்கி தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
காங்., நின்ற கதிர்காமம் தொகுதியில் வடிவேல் என்பவரும், கம்யூ., போட்டியிட்ட தட்டாஞ்சாவடி தொகுதியி ல் டாக்டர் நித்திஷ் என்பவரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி, வலம் வந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டணியில் உள்ள காங்., கம்யூ., கட்சிகளிடையே கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி யுள்ளது.