/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பை மேடாகும் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் சுகாதாரத்தை காக்க சுற்றுவேலி அமைக்கப்படுமா?
/
குப்பை மேடாகும் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் சுகாதாரத்தை காக்க சுற்றுவேலி அமைக்கப்படுமா?
குப்பை மேடாகும் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் சுகாதாரத்தை காக்க சுற்றுவேலி அமைக்கப்படுமா?
குப்பை மேடாகும் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் சுகாதாரத்தை காக்க சுற்றுவேலி அமைக்கப்படுமா?
ADDED : அக் 25, 2025 07:57 AM

புதுச்சேரி: திறமையான மாணவர்களை கண்டறிய உருவாக்கப்பட்ட லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம், பராமரிப்பின்றி குப்பை மேடாகி வருவதை தடுக்க, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காலை, மாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றனர். ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் இல்லாத நிலையில், சிமென்ட் பெஞ்சுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
சிமென்ட் பெஞ்சுகளில் உட்காருபவர்கள், தாங்கள் கொண்டுவந்த ஸ்நாக்ஸ் மற்றும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு, கேரி பேக், திண்பண்டங்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே வீசி விட்டு செல்கின்றனர். இத்தனைக்கும் அருகிலேயே குப்பை தொட்டிகள் இருந்தும் கூட, எவரும் சமூகப் பொறுப்போடு நடந்து கொள்வதில்லை. இதனால், மைதானத்தை சுற்றிலும் தினசரி குவியும் குப்பையால், துர்நாற்றம் வீசுகின்றது.
சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில், நேற்று கிரீன் வாரியர்ஸ், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டு, சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகளை அகற்றினர்.
ஒவ்வொரு முறையும் ஸ்கேட்டிங் மைதானம் குப்பை மேடாக மாறுவதும், பின்னர் துப்புரவு பணி நடப்பதும் வாடிக்கையாகி விட்டது.
கேள்விக்குறியாகும்பாதுகாப்பு ஸ்கேட்டிங் மைதானத்தில் சுற்று வேலி இல்லாததால் நாலாபுறங்களில் இருந்து வந்து கும்பலாக கூடுகின்றனர். அப்படியே கேக் வெட்டி கும்மாளமிடுகின்றனர். இது மோதலில் போய் முடிகின்றது. நேற்று கூட கல்லுாரி மாணவர் ஒருவரை ஸ்கேட்டிங் மைதானத்தில் ஒரு கும்பல் சுற்றி வளைத்து மிரட்டியது. போலீசாரை கண்டதும் அக்கும்பல் தப்பியது. இல்லையெனில் அசம்பாதவிதம் ஏற்பட்டிருக்கும்.
ஒன்று ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் வேலி அமைத்து யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுக்க வேண்டும். இல்லையெனில் குப்பைகளை உருவாக்கும் சிம்மாசனமாக உள்ள பார்வையாளர் கேலரியை அகற்றிவிடலாம்.
இது தொடர்பாக பள்ளி கல்வித் துறையின் விளையாட்டு நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் குப்பைகளை ஸ்கேட்டிங் மைதானத்தில் போடாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும்.

