/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.9.89 கோடியில் புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா திறப்பு
/
ரூ.9.89 கோடியில் புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா திறப்பு
ரூ.9.89 கோடியில் புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா திறப்பு
ரூ.9.89 கோடியில் புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா திறப்பு
ADDED : அக் 25, 2025 07:57 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 9.89 கோடி மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா ரூ.9.89 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி துவங்கப்பட்டது. அதன் பணிகள் முடிவடைந்து, திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி பூங்காவை திறந்து வைத்து, புதிய பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டார். பின், பூங்கா தொடர்பான குறிப்பேடு அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வேளாண்துறை செயலர் யாசின் சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பூங்காவின் நுழைவு வளைவு, அழகான லில்லி குளம் உள்ளிட்ட நீரூற்றுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் டீசல் ரயில் மாற்றப்பட்டு ரூ.1.16 கோடி செலவில் நவீன பேட்டரியில் இயங்கும் புதிய உல்லாச ரயில் விடப்பட்டுள்ளது.
பூங்காவைச் சுற்றிப் பார்க்க வரும் முதியோர், பெண்கள், குழந்தைகள், இயலாதோர் ஆகியோருக்காக 4 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1826ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா. தற்போது புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் சிறந்த இடமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

