பிரிக்ஸ் மாநாட்டுக்கு எல்லாம் தயார்: பிரதமர் மோடி வீடியோ வெளியீடு
பிரிக்ஸ் மாநாட்டுக்கு எல்லாம் தயார்: பிரதமர் மோடி வீடியோ வெளியீடு
ADDED : செப் 10, 2026 06:43 PM

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்கு எல்லாம் தயார் எனக்கூறி பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் டில்லியில் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஈரான் அதிபர்கள் டில்லி வர உள்ளனர். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் டில்லியில் செய்யப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் போலீசார், உளவுத்துறையினர் உன்னிப்பாக தலைநகரை கவனித்து வருகின்றனர். விவிஐபிக்கள் செல்லும் பாதைகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதுடன் அது குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டிற்கு எல்லாம் தயார் எனக்கூறி பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் மாநாடு நடக்கும் பாரத மண்டபத்தின் முகப்பு தோற்றம், பல நாட்டு கொடிகள் கட்டப்பட்டுள்ள காட்சிகள், மாநாடு நடக்கும் அரங்கம், தலைவர்கள் பேச்சு நடத்தும் அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.https://x.com/narendramodi/status/2098026841844138247
