தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இடைத்தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: ஜெகத்ரட்சகன் எம்.பி., பேட்டி

இடைத்தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: ஜெகத்ரட்சகன் எம்.பி., பேட்டி

இடைத்தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: ஜெகத்ரட்சகன் எம்.பி., பேட்டி


UPDATED : செப் 10, 2026 06:12 PM

ADDED : செப் 10, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 06:12 PM ADDED : செப் 10, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில், போட்டியிடும் சேதுசெல்வம் நேற்று பிரசாரத்தை துவக்கினார். அவரை ஆதரித்து ஜெகத்ரட்சகன் எம்.பி., வீடுவீடாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கூறியதாவது:

இது ஒரு பிரகாசமான தொகுதி. இந்த தொகுதியில் தி.மு.க., பலமுறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலிலும் அதிக ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். மற்றவர்கள் கூட்டணியில் சேர வரலாம். அதற்காக தி.மு.க., மற்றவர்களை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் வியூகம் என்ன என்பதை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம்.

தனித்து நின்று இந்த தொகுதியில் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு நாளும் கூட்டணி பெயரை அறிவிக்கிறார்கள். அதற்கெல்லாம பதிலலிக்க முடியாது. தட்டாஞ்சாவடி தொகுதியில் மிகப்பெரிய மாற்றத்தை நடத்தி காட்டுவோம். மக்கள் மாற்றத்திற்கு தயாராக உள்ளனர். புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் கூட நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிழவுகிறது. இங்கு தி.மு.க., வெற்றி பெற்றால் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வர முடியும். கூட்டணி இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us