ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாணவிகள் செயல் விளக்கம்
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாணவிகள் செயல் விளக்கம்
ADDED : செப் 10, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வேளாண்துறை சார்பில், வாதானுாரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த செயல் விளக்கம் நடந்தது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ், மதகடிப்பட்டு பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், வாதானுார் கிராமத்தில் பயிர் மேலாண்மை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. வேளாண் அலுவலர் நடராஜன், துணை வேளாண் அலுவலர் பக்கிரி மற்றும் மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
