நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; அவசர அவசரமாக அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறக்கம்
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; அவசர அவசரமாக அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறக்கம்
ADDED : ஆக 20, 2025 09:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுகாத்தி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அலையன்ஸ் ஏர் விமானம், அவசர அவசரமாக கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கவுகாத்தியின் லோக் பிரியா கோபிநாத் போர்டோலோய் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.09 மணிக்கு கோல்கட்டாவுக்கு புறப்பட்டு சென்றது. கிளம்பிய சில நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி உணர்ந்தார்.
இதையடுத்து, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, மீண்டும் கவுகாத்தி விமான நிலையத்திலேயே விமானம் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.