ADDED : மார் 17, 2024 04:26 AM

உத்தவ் தாக்கரேவுடன் கூட்டணி முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. அதற்கான காரணமும், நோக்கமும் எங்களுக்கு இல்லை. மோடி எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள அவர், போலி மதச்சார்பற்ற அரசியலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.
தேவேந்திர பட்னவிஸ்
மஹா., துணை முதல்வர்,  பா.ஜ.,
ஜனநாயகத்தை அழிக்கின்றனர்!
என் கணவர் ஹேமந்த் சோரனை மத்திய அரசு அநியாயமாக, 45 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்துள்ளது. அதே சமயம், பா.ஜ., பெரும் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மற்றும் பிற வகையில் நன்கொடைகளை திரட்டி ஜனநாயகத்தை அழிக்கிறது.
கல்பனா சோரன்
உறுப்பினர்,
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
அரசியலமைப்பை திருத்துவோம்!
காங்கிரஸ் விரிவான சமூக, பொருளாதார மற்றும் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்தும் என உத்தரவாதம் தந்துள்ளது. அதேபோல் மற்றொரு உத்தரவாதத்தையும் வழங்குகிறோம். அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீடு வரம்பை உயர்த்துவோம்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்

