பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
ADDED : அக் 06, 2025 07:19 PM

புதுடில்லி: பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் பாஜ பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான எம்ஜே அக்பர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர், புதிய புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது;
தற்போதைய சூழலில் உலகின் 4வது மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகின்றது. விரைவில் 3வது நாடாக இந்தியா மாறும். தெற்காசியாவில் உள்ள நாடுகளை நீங்கள் உற்று பார்த்தீர்கள் என்றால், இந்தியா எப்படி ஸ்திரத்தன்மையுடன் உள்ளது என்பதை காணலாம்.
பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். எதிர்காலத்தைப் பற்றி பேச நான் விரும்பவில்லை.
இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.