sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாக்காளர் பட்டியல் திருத்தம் முதல் வேலைவாய்ப்பு வரை: பீஹார் தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய விஷயங்கள்

/

வாக்காளர் பட்டியல் திருத்தம் முதல் வேலைவாய்ப்பு வரை: பீஹார் தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய விஷயங்கள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் முதல் வேலைவாய்ப்பு வரை: பீஹார் தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய விஷயங்கள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் முதல் வேலைவாய்ப்பு வரை: பீஹார் தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய விஷயங்கள்


ADDED : அக் 06, 2025 06:57 PM

Google News

ADDED : அக் 06, 2025 06:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் வேலைவாய்ப்பின்மை, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்படி உள்ளிட்ட பிரச்னைகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஹாரில் 243 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,14 ல் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன.

இதில் ஆளும் கூட்டணியில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜ ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்களுடன் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பஸ்வான் மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரும் உள்ளனர்.

எதிர்க்கட்சியின் மஹாபந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன. அவர்களுடன் சிபிஐ(எம்எல்) மற்றும் சில சிறிய கட்சிகளும் உள்ளன.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற முடியாத எதிர்க்கட்சி கூட்டணி இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என மும்முரம் காட்டுகின்றன. ஆளுங்கட்சியோ ஆட்சியை தக்க வைக்க போராடுகிறது.

இதனிடையே, இந்த தேர்தலில் எதிரொலிக்க உள்ள முக்கிய விஷயங்கள் குறித்து சில பட்டியல் வெளியாகி உள்ளன. அதன்படி,

வாக்காளர் பட்டியல் திருத்தம்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. இது குறித்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்ட போதிலும், ஓட்டுக்கள் திருடப்படுவதாக குற்றம்சாட்டுகின்றன.

சட்டம் ஒழுங்கு

நிதீஷ்குமார் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இதனை ஏற்க மறுத்துவிட்ட ஆளுங்கட்சி முன்னரை விட சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதாகவும், போலீசார் திறம்பட பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நலத்திட்டங்கள்

இந்த தேர்தலில் மத்திய, மாநில அரசுகள் சமீபத்தில் அறிவித்த நலத்திட்டங்கள் பல பெரியளவில் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆளுங்கட்சி கூட்டணி நம்புகிறது. ஆனால், சில பிரச்னைகளை மாநில அரசு சரி செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்கள்

வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும் பிரச்னையை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன. மாநிலத்துக்கு உள்ளேயே, போதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த மாநில அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சி கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

மாநில சிறப்பு அந்தஸ்து

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற பிரச்னையை வைத்து நிதீஷ்குமாரை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. மத்தியில் கூட்டணியில் இருந்தும் சிறப்பு அந்தஸ்தை பெற முடியவில்லை எனக்கூறி ஓட்டை கவர முயற்சிக்கின்றன.

இட ஒதுக்கீடு

மாநிலத்தில் ஜாதிரீதியிலான கணக்கெடுப்புக்கு பிறகு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் உரிமை கோருகின்றன. இது போக இன்னும் சில விஷயங்களை இரு தரப்பும் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

இதனால், நவ.,12 ம் தேதி வரை பீஹாரில் சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறப்பதுடன், விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us