அத்வானியை நேரில் சந்தித்த அமித்ஷா: பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
அத்வானியை நேரில் சந்தித்த அமித்ஷா: பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
UPDATED : பிப் 06, 2024 03:50 PM
ADDED : பிப் 06, 2024 03:48 PM

புதுடில்லி: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எல்.கே.அத்வானியை இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சமீபத்தில், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்நிலையில், எல்.கே. அத்வானியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்.,06) டில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இது குறித்து அமித்ஷா எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பிறகு, அத்வானியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நாட்டின் கலாச்சார பாரம்பரியம், அரசியல் மற்றும் முன்னேற்றத்திற்கு அத்வானி முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அவர் ஆற்றிய பணி நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அத்வானிக்கு பாரத ரத்னா வழங்க முடிவு செய்ததன் மூலம், அவரது அயராத போராட்டங்களையும் பங்களிப்பையும் கவுரவித்துள்ளார். இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

