ADDED : அக் 08, 2025 11:46 PM
புதுடில்லி:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன் புதிய மின்னஞ்சலை நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட,'ஜோஹோ மெயில்' தளத்திற்கு மாற்றி, அது குறித்த அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்.
நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், 'மொபைல் போன்' மற்றும் கணினி மென் பொருட்கள் பெரும்பாலும் அமெரிக்க தயாரிப்புகளாக உள்ளன.
இந்திய இறக்குமதி களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்து வருவதால், கடந்த சில மாதங்களாக இரு தரப்பு உறவு மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், 'உள்நாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும், அவற்றை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்' என, பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த நேரத்தில் தான், தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின், 'ஜோஹோ' நிறுவனம் உருவாக்கிய, 'அரட்டை' என்ற தகவல் பரிமாற்ற செயலி பிரபலம் அடைந்தது.
கடந்த 2021லேயே இது வெளிவந்து இருந்தாலும், தற்போது தான் அதிக கவனம் பெற்றது.
ஒரு சில தினங் களிலேயே, 75 லட்சம் சந்தாதாரர்களை பெற்றது.
மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும், 'வாட்ஸாப்' செயலிக்கு பதிலாக, 'அரட்டை' செயலிக்கு மாறியுள்ளதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, 'ஜோஹோ' நிறுவனத்தின்,'ஜோஹோ மெயில்' தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
நம் நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் அமெரிக்க தயாரிப்பான, 'ஜி - மெயில்' சேவைக்கு மாற்றாக இது உருவெடுத்துள்ளது.
மத் திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஜோஹோ' மின்னஞ் சலுக்கு தற்போது மாறி உள்ளார்.
சமூக வலைதளத்தில், 'நான் 'ஜோஹோ' மெயிலுக்கு மாறியுள்ளேன். என் புதிய மின்னஞ்சல் முகவரி: amitshah.bjp@zohomail.in. இனி அனைத்து தொடர்புகளுக்கும் இந்த முகவரியைப் பயன் படுத்தவும்' என அவர் குறிப்பிட் டுள்ளார்.