அம்மாடியோவ்... அரண்மனை ஹோட்டல்களில் புத்தாண்டு கட்டணம் எப்படின்னு பாருங்க...!
அம்மாடியோவ்... அரண்மனை ஹோட்டல்களில் புத்தாண்டு கட்டணம் எப்படின்னு பாருங்க...!
UPDATED : டிச 31, 2024 02:56 PM
ADDED : டிச 31, 2024 02:41 PM

புதுடில்லி: பிரபல ஹோட்டல்களில் ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவதற்கான கட்டணம் விவரம் வெளியாகி, மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், இன்று மாலை களை கட்டத் தொடங்கும். நாளை அதிகாலை வரை இடைவிடாத கொண்டாட்டம் இருக்கும். வசதி படைத்தவர்கள், ஹோட்டல்களில் அறைகள் புக் செய்து, கொண்டாடுவது வழக்கம். இதனால் டில்லி மற்றும் மும்பையில் உள்ள ஆடம்பர ஹோட்டல்கள் , கடற்கரை ரிசார்ட்டுகளின் புத்தாண்டு கொண்டாட்ட கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
காசு ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், நட்சத்திர ஹோட்டல்களிலும், அரண்மனை ஹோட்டல்களிலும் தங்கி புத்தாண்டை கொண்டாடவே மக்கள் விரும்புகின்றனர். இந்த சூழலிலும் இந்தியாவில் 'டாப்' 10 புத்தாண்டு கட்டணம் கொண்ட ஹோட்டல்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
* தாஜ் ஏரி அரண்மனை 1ம் இடத்தில் உள்ளது. இந்த ஹோட்டல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.14,27,000
* தாஜ் பேலஸ் ஹோட்டல் 2ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 4,10,000
* ஓபராய் உடை விலாஸ் ரிசார்ட் 3ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் 50 ஏக்கர் பரப்பரபளவைக் கொண்டுள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.4,67,000 (இரண்டு தினங்களுக்கு மட்டும்)
* உமைத் பவன் அரண்மனை 4ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.10,17,120
* லீலா அரண்மனை கோவளம் 5ம் இடத்தில் உள்ளது. இது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.2,75,440
* தாஜ்மஹால் அரண்மனை 6ம் இடத்தில் உள்ளது இது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ.1,27,440
* ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டல் 7ம் இடத்தில் உள்ளது. இது உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 8,40,000
* ஓபராய் ராஜ்விலாஸ் ஹோட்டல் 8ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 1,29,800.
* தாஜ் பலக்னுமா அரண்மனை 9ம் இடத்தில் உள்ளது. இது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ. 7,08,000
* ஓபராய் வன்யா விலாஸ் 10ம் இடத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ரன்தம்போர் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 பெரியவர்களுக்கு காலை உணவுடன் கட்டணம் ரூ1,98,000