ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்காத அமிர்தசரஸ் எஸ்.பி., 'சஸ்பெண்ட்'
ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்காத அமிர்தசரஸ் எஸ்.பி., 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 15, 2025 10:36 PM

சண்டிகர்: பஞ்சாபில், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய, அமிர்தசரஸ் புறநகர் போலீஸ் எஸ்.பி., மணீந்தர் சிங், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டு உள்ள அறிக்கை:
ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அமிர்தசரஸ் புறநகர் எஸ்.பி., மணீந்தர் சிங், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமலும், தன் கடமையை சரிவர செய்யாமலும் இருந்ததற்காக, சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
இது, ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி மீது, ஆம் ஆத்மி அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாபில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி ரவுடிகள் பணம் பறிக்கும் செயல் அதிகரித்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்த நிலையில், முதல்வர் பகவந்த் மான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தரன்தரன் தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய, ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 'ரவுடிகள் பஞ்சாப் மாநிலத்தை விட்டு ஒரு வாரத்துக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்து இருந்தார்.

