ஆந்திரா முதல்வரின் சகோதரி ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்!
ஆந்திரா முதல்வரின் சகோதரி ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்!
ADDED : ஜன 04, 2024 11:28 AM

ஐதராபாத்: ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி தலைவர் ஷிர்மிளா இன்று காங்கிரசில் இணைந்தார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், தெலுங்கானாவில் ஓய்.எஸ்ஆர்., தெலுங்கானா என்ற கட்சியின் தலைவருமான ஷர்மிளா.48 தெலுங்கானாவில் கடந்தாண்டு (2023) நவம்பரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடபோவதில்லை எனவும் அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என அறிவித்தார். தெலுங்கானாவில் காங்., பெரும்பான்மையுடன் ஆட்சியைபிடித்தது.
இந்நிலையில் ஷர்மிளா தனது ஆதரவாளர்களுடன் டில்லியில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்.,எம்.பி ராகுல் ஆகியோரை சந்தித்து தனது கட்சியை காங்கிரசில் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் ஓட்டுக்கள் பிளவுபடுவதை தடுக்க காங்கிரசுடன் ஷர்மிளா இணைந்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை
தேர்தலுக்காக குடும்பங்களை பிரிக்க ஒரு கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூட தருவார்கள் என சகோதரி ஷர்மிளாவுக்கு ஆந்திரா முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.