ஆந்திர மாநில காங்., தலைவராகிறார் ஓய்.எஸ்.ஆர்., ஷர்மிளா
ஆந்திர மாநில காங்., தலைவராகிறார் ஓய்.எஸ்.ஆர்., ஷர்மிளா
ADDED : ஜன 15, 2024 07:28 PM

ஐதராபாத்: தனது கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் ஐக்கியமான ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி தலைவர் ஷிர்மிளாவிற்கு பரிசாக ஆந்திர மாநில காங்.,தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், தெலுங்கானாவில் ஓய்.எஸ்ஆர்., தெலுங்கானா என்ற கட்சியின் தலைவருமான ஷர்மிளா.48 தெலுங்கானாவில் கடந்தாண்டு (2023) நவம்பரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடபோவதில்லை எனவும் அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க போவதாக அறிவித்தார். தெலுங்கானாவில் காங்., பெரும்பான்மையுடன் ஆட்சியைபிடித்தது.
இந்நிலையில் ஷர்மிளா தனது ஆதரவாளர்களுடன் கடந்த 4-ம் தேதியன்று டில்லியில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்.,எம்.பி ராகுல் ஆகியோரை சந்தித்து தனது கட்சியை காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானாவில் ஓட்டுக்கள் பிளவுபடுவதை தடுக்க காங்கிரசுடன் ஷர்மிளா இணைந்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஷர்மிளாவிற்கு ஆந்திர மாநில காங்., தலைவர் பதவியை வழங்கிட காங்., மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு வசதியாக தற்போதை ஆந்திர மாநில காங்., தலைவராக உள்ள ஜி.ஆர். ராஜூ தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அப்பதவிக்கு ஷர்மிளாவை காங்., மேலிடம் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இம்மாநில முதல்வராக சொந்த அண்ணன் ஜெகமோகன் ரெட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.