உள்ளடக்கத்திற்கு செல்ல

அரசு நிகழ்ச்சியில் ஆவேசப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ; மேடையிலேயே மைக்கை தூக்கி எறிந்து ஆத்திரம்
அரசு நிகழ்ச்சியில் ஆவேசப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ; மேடையிலேயே மைக்கை தூக்கி எறிந்து ஆத்திரம்
ADDED : நவ 15, 2026 05:20 PM

அ நிறம் | அளவு
-நமது நிருபர்-
உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் தாமி பங்கேற்றார்.முதல்வர் புஷ்கர் சிங் தாமி கண்காட்சியைத் துவங்கி வைத்துவிட்டு, ஹரிஷ் தாமி பேசுவதற்கு முன்பாகவே மேடையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அரசு நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி, மைக்கைத் தூக்கி எறிந்ததுடன், ஒலி அமைப்பைக் கையாண்டவரைத் தாக்கி, மேடையையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் தாமி சேதப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசு விழாவில் மேடையைச் சேதப்படுத்தியதற்காகவும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி யதற்காகவும் ஹரிஷ் தாமி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது.
