ADDED : ஜன 22, 2024 06:35 AM

அமாவா ராம் மந்திர் என்பது அயோத்தியில் ராம் கோட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.இது, ராமர் கோவில் அருகே உள்ளது. இங்கு காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. அன்னதானத்தில் சப்பாத்தி, பருப்பு இவற்றுடன் சாதம், கூட்டு சாம்பார், மோரும் அளவில்லாமல் வழங்கப்படுகின்றன.
மொத்த அயோத்தியிலும் இங்கு மட்டுமே அன்னதானம் நடக்கிறது. இவ்வளவு பேருக்கு என்று இல்லாமல் எவ்வளவு பேர் வந்தாலும் அன்னதானம் செய்கின்றனர்.
ராமர் மீது பக்தி கொண்ட மன்னர் ஒருவர், தன் பணத்தில் பெரும்பகுதியைக் கொண்டு வந்து இங்கு இந்த அன்னதானத்தை துவங்கியதுடன், தன் காலத்திற்கு பிறகும் தொடர்ந்து நடக்குமளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளாராம்.
இதன் காரணமாக அன்னதானத்திற்கு என்று யாரிடமும் பணம் கேட்பது இல்லை; அதே நேரம் பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையை மறுப்பதுமில்லை.
இதே வளாகத்தில் ரகுபதி லட்டு பிரசாத கடையும் உள்ளது; இதில் என்ன விசேஷம் என்றால், கடையின் விளம்பர பலகையில் தமிழிலும் எழுதி வைத்துள்ளனர். பசு நெய்யால் செய்யப்பட்ட லட்டு கிலோ, 300 ரூபாய்க்கு பிரசாதம் போல விற்கப்படுகிறது.