தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை

பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை

பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை

216


UPDATED : ஜூன் 02, 2026 06:24 PM

ADDED : ஜூன் 02, 2026 02:01 PM

Follow on GoogleFavourite on Google

216

UPDATED : ஜூன் 02, 2026 06:24 PM ADDED : ஜூன் 02, 2026 02:01 PM


216
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாஜவில் இருந்து அண்ணாமலை விலகினார்; அவர் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.

பாஜவில் தனக்கு பதவி எதுவும் வழங்கப்படாததால், அதிருப்தியில் உள்ள அண்ணாமலை, தனியாக கட்சி தொடங்க உள்ளதாக, தகவல் பரவியது. இந்தசூழ்நிலையில், அவரை பா.ஜ., டில்லி மேலிடம் அழைத்தது. எனவே, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக, நேற்று சென்னையிலிருந்து விமானத்தில், டில்லி புறப்பட்டு சென்றார்.

டில்லியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் அண்ணாமலை தங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூன் 02) பாஜ தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். அப்போது பாஜவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.

இன்று இரவும் பேச்சுவார்த்தை!

இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் ஆகியோரையும் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். தனது ராஜினாமா தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர் இச்சந்திப்புகளில் ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷாவுடனான சந்திப்புடன் இந்த ஆலோசனைகள் நிறைவடைந்தன. அண்ணாமலையின் ராஜினாமா விவகாரம் குறித்து விவாதித்தனர்; இருப்பினும் அண்ணாமலை இதுவரை தனது ராஜினாமா கடிதத்தை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை. இன்று இரவு பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின், அண்ணாமலை ஆகியோர் இதே விவகாரம் குறித்து மேலும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அண்ணாமலை தமிழகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

யார் இந்த அண்ணாமலை

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள தொட்டம்பட்டியில் 1984ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி அண்ணாமலை பிறந்தார். 2011ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார்.

2020ல் பாஜகவில் இணைந்த அவர், 2021ல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியடைந்தார்.

2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இன்று பாஜவில் இருந்து விலகினார்.

முன்பே கணித்த தினமலர்!

தனிக்கட்சி துவங்க அண்ணாமலை முடிவு; பெருந்துறை தொகுதியில் போட்டி? என்ற தலைப்பில் நேற்றைய தினம் (ஜூன் 01) நமது தினமலர் நாளிதழ் மற்றும் வெப்சைட்டில் செய்தி வெளியாகி இருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் இடம் வழங்கி இருக்கிறார். தற்போது புதிய கட்சி துவங்குவது குறித்து எப்பொழுது அண்ணாமலை அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முன்பே கணித்து தினமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜ கட்சியில் இருந்து விலகுவது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வீட்டில் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் அண்ணாமலை.



அடுத்த கட்டம்!

பாஜவில் இருந்து விலகி உள்ள அண்ணாமலை, வரும் 15ம் தேதிக்குள் புதிய கட்சி தொடங்க உள்ளார். அக்கட்சி சார்பில், பெருந்துறை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார். தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அத்தேர்தலில், பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடவும் வாய்ப்புள்ளது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us