ADDED : ஜூன் 02, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்.ஜுன் 3 -: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
காரைக்கால் கிதர் பள்ளி தெருவை சேர்ந்த பாவா பக்ருதீன். இவரது மகள் சபீனா, 18 ; இவர் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்துவந்துள்ளார். இவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்து, மகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சபீனா இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு துாங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சபீனாவை காணாமல் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடன் சபீனாவை உறவினர்கள் , தொழிகளின் வீடுகளில் தேடியும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.
சபீனாவின் தந்தை பக்ருதீன் புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
