ADDED : ஜூன் 02, 2026 04:00 PM
புதுச்சேரி: தமிழக அரசை பின்பற்றி, புதுச்சேரி கோவில், பள்ளிகள் அருகேயுள்ள மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய், மக்கள் நலன் கருதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களின் பாதிப்புகளை அறிந்து, கோவில் மற்றும் பள்ளிகளின் அருகில் செயல்பட்ட மதுகடைகளை உடனடியாக அகற்றி உள்ளார்.
அது மக்களாட்சி, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் கோவில், மசூதி, சர்ச், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் அருகே ஏராளமான மதுக்கடைகள் மற்றும் ரெஸ்ட்ரோ பார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகையால், தமிழக அரசை பின்பற்றி புதுச்சேரி முதல்வர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த மதுக்கடைகளை மூட முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
