ADDED : அக் 24, 2026 07:17 PM
லாசா: திபெத்தில், 16 பேரை பலிவாங்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, 30 மணி நேரத்தில், 4.5 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத், தன்னாட்சி பகுதியாக உள்ளது. அங்குள்ள நாக்கூ நகரின் பக்கென் கவுன்ட்டி என்ற இடத்தை மையமாக வைத்து, நேற்று (அக்.,23) இரவு , 7.0 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 350க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந் ததில் 16 பேர் பலியாகினர்.
இது, கடந்த 2024 ஜனவரிக்கு பின், திபெத்தை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 30 மணி நேரம் கடந்த நிலையில், நேற்று, 4.5 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த, மூன்று நாட்களில் மட்டும், 413 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
