தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மும்பையில் ‘ரேபிடோ’ டிரைவர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மும்பையில் ‘ரேபிடோ’ டிரைவர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மும்பையில் ‘ரேபிடோ’ டிரைவர் கைது


UPDATED : அக் 24, 2026 07:17 PM

ADDED : அக் 24, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 07:17 PM ADDED : அக் 24, 2026 07:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ‘ரேபிடோ’ டிரைவராக பணியாற்றி வந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுதும் பயங்கரவாத கருத்துகளை பரப்ப முயல்பவர்கள், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் முகமது ஹசன் அபு சர்மத் அக்தர், 33, என்பவர், சமூக வலைதளங்களில் பயங்கரவாத கருத்துகளை பரப்பி, மதக் கலவரத்தை துாண்ட முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், அவரது நடவடிக்கைகளை பின்தொடர்ந்து வந்தனர். குறிப்பாக கடந்த ஜூன் 1ல், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் வன்முறையை துாண்டும் கருத்துகளை, ‘டெலிகிராம்’ சமூக ஊடக செயலியில் பகிர்ந்தார்.

அத்துடன் பிரதமர் மோடியின் மும்பை பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பான செய்திக்கும், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் எதிர்வினையாற்றி இருந்தார்.

அவரது நடவடிக்கைகள், பயங்கரவாத சதிச் செயலுக்கு வித்திடும் வகையில் இருந்ததை அடுத்து, மும்பை மாஹிம் பகுதியில் இருந்தவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.

‘ரேபிடோ’ எனப்படும், ‘பைக் டாக்சி’ டிரைவராகவும், வாசனை திரவியங்கள் விற்பனை செய்பவராகவும் முகமது ஹசன் வலம் வந்துள்ளார். மேலும், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, முகமது ஹசனுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், பாகிஸ்தானில் யாருடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us