தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பவளவிழா நுால்கள் வெளியீடு

பவளவிழா நுால்கள் வெளியீடு

பவளவிழா நுால்கள் வெளியீடு


ADDED : அக் 25, 2026 02:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரிமளம் பத்மநாபன் 75வது பவளவிழா நுால்கள் வெளியீட்டு விழா ஜெயராம் ஓட்டலில் நடந்தது.

சுப்ரமணியன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். மதுரை எம்.பி., வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில், இசைத்தமிழ் வரலாற்றில் அரிமளம் நுாலினை முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், ‘சிலப்பதிகாரத்தில் யாழும், ஊழும்’ நுாலினை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, தொல்காப்பியத்தில் இன்றைய இசை இலக்கணம் நுாலினை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக, புல முதன்மையர் நிர்மல் செல்வமணி ஆகியோர் வெளியிட்டனர்.

நுாலினை பழனி, பாலசுப்ரமணியன், இளங்கோவன், சிவக்குமார், திருநாவுக்கரசு, இளவேனில், பச்சையம்மாள், கோபி, மீனாட்சி தணிகாசலம், கிருத்திகா, சங்கரி–பாரதி ஆகியோர் பெற்று கொண்டனர்.

சென்னை தமிழிசை கல்லுாரி முதல்வர் மீனாட்சி ஜெயகுமார், சுந்தர வெங்கடேசன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நுால் அறிமுக உரையாற்றினர்.

நுாலாசிரியர்கள் கிருஷ்ணசாமி, மார்கரெட் பாஸ்டின் ஏற்புரை வழங்கினர். அரிமளம் பத்மநாபன் மகிழ்வுரை ஆற்றினார். அறிவன் அருள் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us