ADDED : ஜூலை 20, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சுபாஷ் பிளேஸில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும், ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லி சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் ஜூன் 12ம் தேதி புகுந்த கும்பல், கடை உரிமையாளரை கத்தியால் குத்தி, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவம்,22, என்பவர், உ.பி., மாநிலம் ஆக்ராவில் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது.