தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காதல் போட்டியில் மாணவர் கொலை மற்றொரு மாணவர் கைது

காதல் போட்டியில் மாணவர் கொலை மற்றொரு மாணவர் கைது

காதல் போட்டியில் மாணவர் கொலை மற்றொரு மாணவர் கைது


UPDATED : நவ 04, 2026 01:41 PM

ADDED : நவ 04, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 01:41 PM ADDED : நவ 04, 2026 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: கேரளாவில் சக மாணவியான காதலி யாருக்கு என்ற போட்டியில் மாணவரை கழுத்தை இறுக்கி கொன்ற மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே பாங்கப்பாறையை சேர்ந்தவர்கள் மதுகுமார் – -தர்மஜா தம்பதி. இவர்களது மகன் அபிராம் 17. தனியார் ஆங்கிலப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தர்மஜாவும், மூத்த மகளும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாலை 3:00 மணிக்கு நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற அபிராம் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மது குமார், ஸ்ரீகாரியம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அபிராமை தேடி வந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவியின் இன்ஸ்டாகிராமில் இருந்து அபிராமுக்கு ஒரு தகவல் வந்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் ஒன்றாக படிக்கும் 17 வயது மாணவரின் காரில் அபிராம் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் கிடைத்தது. தொடர்ந்து அந்த மாணவியையும், மாணவரையும் போலீசார் பிடித்தனர்.

போலீசார் கூறியதாவது:

அபிராமும் ஒரு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதே மாணவியை அபிராமுடன் படிக்கும் மற்றொரு மாணவரும் காதலித்து வந்துள்ளார். காதலியின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டு இந்த மாணவருக்கு தெரியும். இதனால் அபிராமும் மாணவியும் சாட்டிங் செய்யும் அனைத்து விபரங்களும் இந்த மாணவருக்கும் தெரிந்திருந்தது. இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகரிப்பதை அறிந்த இந்த மாணவர் அபிராமை கொல்ல சதி திட்டம் தீட்டி உள்ளார்

சம்பவத்தன்று தன்னை சந்திக்க அங்குள்ள ஒரு இடத்துக்கு வருமாறு மாணவி அனுப்புவது போல் அபிராமுக்கு இவர் மெசேஜ் அனுப்பினார். காதலிதான் வரச் சொன்னதாக கருதி அபிராம் அந்த இடத்திற்கு சென்றார். ஆனால் அங்கு காத்திருந்த மாணவர் ‘ என்னுடைய காதலியை நீ எப்படி காதலிக்கலாம் ’என்று கூறி ஆத்திரத்தில் பெல்டால் அபிராமின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை மறைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த உமர் என்ற நபரை அழைத்து இருவரும் சேர்ந்து உடலை சாக்கு மூடையில் கட்டி வாங்கப்பாறை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டு விட்டு தப்பி சென்றனர். அபிராமின் உடலை அப்பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உமர் மற்றும் மாணவரை போலீசார் கைது செய்தனர். கொலையில் மாணவிக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us