ADDED : நவ 04, 2026 02:11 PM

புதுச்சேரி: முதலியார்பேட்டை, அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளித் தலைமையாசிரியர் நிலை–1 ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் நிலை –2 சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விழாவில், பாரத சாரண சாரணியர் இயக்க முன்னாள் இணைச் செயலாளரும், தேசிய நல்லாசிரியருமான ராமலிங்கம் பங்கேற்று, பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி அறிவியலின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக, அறிவியல் ஆசிரியர் பிரியா வரவேற்றார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
ஆசிரியர் ராணி நன்றி கூறினார். விழாவை ஆசிரியர் பரிமளா தொகுத்து வழங்கினார்.
